About our school

VISION

Adapting to the challenges through quality education in compliance with modern curricular changes.

தொலைநோக்கு

நவீன கலைத்திட்ட மாற்றங்களுக்கு ஏற்ப தரமான கல்வியினூடாக எதிர்கால சவால்களுக்கு இயலுமையாகுதல்

MISSION

  ¤  Recognizing the dynamic modern carricular changes.
   ¤  Ensuring student centered education.
   ¤  Empowering proffessional development of teachers at optimum level.
   ¤  Institutionalization of integrated pleasurable formal education

குறிக்கோள்
  ¤  மாறும் நவீன கலைத்திட்ட மாற்றங்களை ஏற்றல்.
  ¤  மாணவர் மையக்கல்வியை உறுதிப்படுத்தல்.
  ¤  உச்ச பயன் தரும் வகையில் ஆசிரியர் வாண்மை விருத்தியை வலுப்படுத்தல்.

  ¤  இணைந்த மகிழ்ச்சிகரமான முறைசார் கல்வி நிறுவன மயமாதல்.

 

 

 

பாடசாலை வரலாறு

ஈழவள நாட்டின் சிரசெனப் போற்றப் படும் யாழ்ப்பாணக் குடாநாடு தமிழர்கள் செறிவாக வாழும் இடமாகவும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் கலை கலாசாரங்களுக்கும் கல்விக்கும் என்றுமே நிகரில்லாத ஓர் புண்ணிய பூமியாக சைவமும் தமிழும் இரண்டறக் கலந்த பிரதேசமாக விளங்கு கின்றது.  யாழ் குடாநாட்டின் வடபால் அமைந்து இருப்பது வடமராட்சி.  இவ் வடமராட்சியானது வடமராட்சி வடக்கு, வடமராட்சி தெற்கு மேற்கு, வடமராட்சி கிழக்கு என்ற மூன்று பிரதேச பிரிவுகளை தன்னகத்தே கொண்டது.

    இத்தகைய வடமராட்சிப் பிரதேசம் இன்று வடமராட்சி கல்வி வலயம் என்ற பிரிவினை மூன்று பிரதேச செயலர் பிரிவு களையும் உள்ளடக்கி அமைந்ததோடு மூன்று பிரதேச செயலர் பிரிவுகளுக்கும் மூன்று கல்விக் கோட்டங்களைக் கொண்டது.  இது கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி என்பனவாகும்.  இவற்றுள் கரவெட்டிக் கோட்டத்தைச் சார்ந்த ஆரம்பப் பாடசாலை களில் ஒன்று எமது பாடசாலை ஆகும்.

    வடமராட்சி என்றால் சிறந்த கல்விமான்களால் நிறைந்த பூமி என்று கூறுவர்.  கல்விக்கும் கலைக்கும் வடமராட்சி நிகரில்லாத பங்களிப்புக்களை வழங்கி நிற்கின்றது.  இந்தவகையில் கல்வியில் உன்னதநிலை பெற்றுள்ள பெரிய பாடசாலைகளும் அவற்றின் ஊட்டல் பாடசாலைகளாக ஆரம்ப பாடசாலைகளும் விளங்குகின்றன.  அந்த வகையில் ஆரம்பக் கல்வியில் வரலாற்று தடம் பதித்து அனைவரும் போற்றுகின்ற தங்கள் பிள்ளைகளையும் சேர்த்துவிட வேண்டுமென பெற்றோர்கள் பலரும் ஆதங்கப்படும் பாடசாலையாக இது விளங்குகின்றது.  இப் பாடசாலையை யாஃ நெல்லியடி மெ.மி.த.க. பாடசாலை என்று அழைப்பதைவிட அரசடிப் பாடசாலை என்ற செல்லப் பெயராலேயே அனைவரும் அழைப்பர்.Read more......

  


Recent News

Our Principal

Mr.N.Thevarajah

Upcoming Events

All Events